ஆன்லைன் பண மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார்களின் அதிகரிப்பு

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணை...


இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Messenger மற்றும் WhatsApp மூலம் பெறப்படும் பரிசுகள் மற்றும் ரொஃபிள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் திறப்பதைத் தவிர்க்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலும் அறிவுறுத்தியுள்ளது. நாளொன்றுக்கு 5க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் திணைக்களம் கூறுகிறது.


இணையத்தில் பணம் சம்பாதித்ததன் மூலம் 80 இலட்சம் ரூபாவை இழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.


கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி, பெரும்பாலும் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இந்த இணையவழி பண மோசடிகளில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.


வெளிநாடுகளில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட நபர்கள் மற்றும் இலங்கையில் இணையும் நபர்களே இந்த மோசடிகளை மேற்கொள்வதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மக்கள் தங்கள் வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் ரகசிய கடவுச்சொற்களை பிற தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என்று கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

Related

SG News 7325924400664985214

கருத்துரையிடுக

emo-but-icon

Advertiesment

CRICKET LIVE UPDATE

Hot in week

Recent

Comments

SMS NEWS ALERT

item