ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு 4.68 மில்லியன் ரூபா இழப்பீடு

வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அப...

வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து 4.68 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

குறித்த சம்பவத்தால் பூரண அங்கவீனமுற்ற, பகுதியளவில் அங்கவீனமுற்ற மற்றும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பஹா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 24 பேர் மற்றும் மஹர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 09 பேருக்கும் இவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ரத்துபஸ்வல சம்பவத்தினால் காயமடைந்த பொதுமக்களுக்கு நியாயம் வழங்கும் பொருட்டு கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், அது தொடர்பாக கண்டறிந்து தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக கம்பஹா மாவட்ட செயலாளரின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

அதன்படி இக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

Source - அத தெரண தமிழ்

Related

News Alert 7522372850298995289

கருத்துரையிடுக

emo-but-icon

Advertiesment

CRICKET LIVE UPDATE

Hot in week

Recent

Comments

SMS NEWS ALERT

item