இறக்குவானையில் மண்சரிவு அபாயத்தால் வெளியேறிய 25 குடும்பங்களுக்கு இன்னும் வீடு இல்லை
இறக்குவானை மாதம்பை இல. 2 தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தால் வெளியேறிய மக்களுக்கு இதுவரை வீடு அமைத்துக் கொடுக்கும் நடவடிக்க...
https://sgnewstamil.blogspot.com/2016/04/25.html
இறக்குவானை மாதம்பை இல. 2 தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தால் வெளியேறிய மக்களுக்கு இதுவரை வீடு அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மாதம்பை வைத்தியசாலைக்கு மேற்பக்கத்தில் சுமார் 25 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. கடந்த 2015 நவம்பர் மாதம் பெய்த கடும் மழையால் வீடுகளிலும் நிலங்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து புவிச் சரிதவியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் இது அவதானிக்கப்பட்டு இவர்களை வெளியேறுமாறு அறிவித்துள்ளனர். கொடக்கவெல பிரதேச செயலாளர் மூலம் இவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு மாதம்பை இல. 2 தமிழ் வித்தியாலயத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இவர்களை உறவினர்கள் வீடுகளுக்கும் தோட்ட மக்கள் வசிக்கும் காலியாக இருக்கும் அறைகளுக்கும் செல்லுமாறு பணிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவிக்காது மாத வாடகைக்கும் உறவினர்களின் வீடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.
2001 வருடமும் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல இலட்சம் ரூபா செலவழித்து வீடுகளைக் கட்டியிருந்த மக்களுக்கு இன்று எல்லாம் கைகழுவ வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
புதிய வீடுகள் அமைக்கும் வசதி இம் மக்களுக்கு இல்லையெனத் தெரிவிக்கும் இவர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தின் மூலம் வீடுகள் அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Related
News Alert
957120607802229183
கருத்துரையிடுக
Advertiesment
CRICKET LIVE UPDATE
Hot in week
-
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணை...
-
சப்ரகமுவ மாகாண சபை ஊழியர்களுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான ...
-
ஒன்பதாவது IPL கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று ஆரம்பமானது. இரு புதிய அணிகள், 4 புதிய அணித் தலைவர்கள் என பல மாற்றங்களோடு தொடங்கும் இந்...
-
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான ...
-
வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அப...
-
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட நீதி நடவடிக்கையில் 2121 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020 ஆண்களும் 101 பெண...
